Public Library – வாசகர் சுயதொழில் விழிப்புணர்வு செயற்றிட்டம் மற்றும் பெண்களை ஊக்குவிக்கும் நிகழ்வு

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் இயங்கும் மஸ்கெலியா பொது நூலகம் மற்றும் சாமிமலை வாசிகசாலை இணைந்து நடாத்திய நூலக வாசகர் சுயதொழில் விழிப்புணர்வு செயற்றிட்டம் மற்றும் பெண்களை ஊக்குவிக்கும் நிகழ்வு 2022.08.26 அன்று கௌரவ தவிசாளர் G.செண்பகவள்ளி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் வருகை தந்து சுயதொழில் தொடர்பாக விழிப்புணர்வு செயலமர்வினை நடாத்தினர். குறித்த செயலமர்வில் சுயதொழில் ஒன்றினை ஆரம்பித்தல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு மஸ்கெலியா பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், செயலாளர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபையின் அலுவலக உத்தியோகத்தர்கள், நூலக அங்கத்தவர்கள் மற்றும் சுயதொழில் மேற்கொள்ளலில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் பொது நூலக கற்றல் வள மத்திய நிலையத்தில் கணணி பாடநெறியினை பூர்த்தி செய்த நூலக அங்கத்தவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ජාතික කියවීම් මාසය වෙනුවෙන් මස්කෙළිය ප්‍රාදේශීය සභාව යටතේ පවත්වාගෙන යනු ලබන මස්කෙළිය මහජන පුස්තකාලය හා අප්කට් කියවීම් ශාලාව එක්ව සංවිධානය කරනු ලැබු පුස්තකාල සාමාජිකයන් සදහා ස්වයං රැකියා පිළිබද දැනුවත් කිරීමේ වැඩසටහන හා කාන්තා සවිබල ගැන්වීමේ වැඩසටහන 2022.08.26 වන දින ගරු සභාපතිනි ජී.සෙන්බගවල්ලි මැතිතුමියගේ ප්‍රධානත්වයෙන් පැවැත්විණි.
ස්වයං රැකියාවක් ආරම්භ කිරීම සම්බන්ධයෙන් මෙහි පැමිණි සිටි ජාතික ව්‍යවසාය සංවර්ධන අධිකාරියේ නිලධාරීන් විසින් දැනුවත් කරන ලදී.
මෙම වැඩසටහන සදහා මස්කෙළිය ප්‍රාදේශීය සභාවේ ගරු සභාපතිනි ජී.සෙන්බගවල්ලි මැතිතුමිය, ලේකම්තුමා, ප්‍රජා සංවර්ධන නිලධාරීතුමා, කාර්ය මණ්ඩලය, පුස්තකාල සාමාජිකයන් සහ ස්වයං රැකියා සම්බන්ධයෙන් උනන්දුවක් දක්වන පිරිස සහභාගී විය.
එසේම මස්කෙළිය මහජන පුස්තකාලයේ ඉගෙනුම් සම්පත් මධ්‍යස්ථානයේ තොරතුරු තාක්ෂණ පාඨමාලාව නිම කල සිසුන් සදහා සහතික පත්‍ර ප්‍රධානය කිරීමද මෙහිදී සිදු විය.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *