“மவுசாக்கலை – சீட்டன்” செல்லும் பிரதான பாதையானது

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட “மவுசாக்கலை – சீட்டன்” பிரிவிற்கு செல்லும் பிரதான பாதையானது, பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் வாகன போக்குவரத்திற்கும் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியிருந்தது.

எனவே இப்பாதையின் அபிவிருத்தி தொடர்பாக மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் G.செண்பகவள்ளி ஊடாக மக்கள் எனது கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

எனவே இப்பாதையானது தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின், 1.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

 

“பிரவுன்லோ – கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்திற்கு” செல்லும் பிரதான பாதையானது

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட “பிரவுன்லோ – கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்திற்கு” செல்லும் பிரதான பாதையானது, பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் வாகன போக்குவரத்திற்கும் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியிருந்தது.

எனவே இப்பாதையின் அபிவிருத்தி தொடர்பாக மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் G.சென்பகவள்ளி ஊடாக மக்கள் எனது கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

எனவே இப்பாதையானது தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின், ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

தெய்வகந்த மற்றும் மஸ்கெலியா வட்டாரத்திற்கான வீதி விளக்குகள்

மஸ்கெலியா பிரதேச சபையின் வருடாந்த நிதி ஒதுக்கீட்டின் ஊடாக நேற்றைய தினம் தெய்வகந்த மற்றும் மஸ்கெலியா வட்டாரத்திற்கான வீதி விளக்குகள் கௌரவ வட்டார உறுப்பினர்கள் இடம் கையளிக்கப்பட்டது.

ஆதன வரி அறவிடல்

ஆதனவரி அறவிடும் நடைமுறை

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் கீழ் ஏதேனும் ஒரு பிரதேசம் முன்னேற்றமடைந்த கிராமமாகப் பிரகடனப்படுத்தப்படும்போது ஆதன வரி அறவிடப்படும்.

ஆதனவரி செலுத்துவதற்கான தகைமை

தமது ஆதனங்கள் பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் முன்னேற்றமடைந்த பிரதேசத்தில் அமைந்திருக்கின்றபோது பின்வருமாறு உரித்தான காணியொன்றில் அல்லது கட்டிடமொன்றில் குடியிருப்பாளராக இருத்தல்.

  • பிரதேச சபை எல்லைக்குள் அசையா சொத்துக்களின் உரிமையாளராக இருத்தல்.
  • பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள வீடொன்றில் கட்டிடமொன்றில் அல்லது காணியொன்றில் வாடகைக்கு இருத்தல்.
  • பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள அரசாங்கத்துக்கு உரிய வீடொன்றில், கட்டிடமொன்றில் அல்லது காணியொன்றின் உரிமையாளராக இருத்தல்.
  • பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள அசையா சொத்துக்களின் பங்கு உரிமையாளராக (சம பங்;கு உரிமையாளர்) இருத்தல்.

இதன்போது,

 தமது சொத்தின் மதிப்பிடப்பட்ட மதிப்பிலிருந்து,

மஸ்கெலியா13%
அப்கட்12%

வரி செலுத்த வேண்டும்

  • குறித்த வருடத்தின் முதல் மாதத்தில் ஆதன வரி செலுத்தும் போது 10மூ கழிவு உரிமையாளருக்குக் கிடைக்கும். குறித்த திகதியில் நிலுவை தொகை எதுவும் இருக்கக்கூடாது.
  • குறித்த ஆண்டில் 4 காலாண்டுக்கு, காலாண்டு காலாண்டாகவும் கூட ஆதனவரியைச் செலுத்த முடியும்.
  •  ஆதனவரி நடைமுறைப்படுத்தப்படுகின்ற பிரதேசத்தில் காணி பகுதியொன்றை கொள்வனவு செய்கின்ற ஒருவர் அதற்கான புதிய ஆதனவரி இலக்கமொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும். (உறுதி சுருக்கமொன்றைச் சமர்ப்பிப்பதன் மூலம்)
  • தற்பொழுது ஆதன வரி இலக்கம் உள்ள ஒருவரின் முழு சொத்தையும் பொறுப்பேற்கின்ற ஒருவர் எனில் உறுதி சுருக்கமொன்றை சமர்ப்பித்து பிரதேச சபை ஆதன வரி பதிவேட்டில் தமது பெயரைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • ஆதனவரி பதிவேட்டில் பெயரைத் திருத்துவதற்கு அல்லது புதிய ஆதனவரி இலக்கமொன்றை பெற்றுக் கொள்வதற்கு உரிய உறுதி சுருக்கப் படிவத்தை கட்டணம் செலுத்தி பிரதேச சபை அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். ( குடியிருப்பு கட்டிடங்களுக்கு ரூ.500 வணிக கட்டிடங்களுக்கு ரூ.1000)
  • அந்த உறுதி சுருக்க படிவத்தை தமது உறுதியைச் சமர்ப்பித்து நொத்தாரிஸ் ஒருவரைக் கொண்டு நிரப்பி சான்றுப்படுத்த வேண்டும்.
  • அவ்வாறு நிரப்பிக்கொண்ட படிவத்தை அதன் பிரதியொன்றுடன் நில அளவை வரைபடத்தின் 2 பிரதிகளுடன் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • அப்பொழுது உங்கள் பெயர் ஆதன வரி செலுத்துபவராக பதியப்படும்.

நபரொருவர் ஆதன வரியினை செலுத்தாவிடில், குறித்த நபருக்கு குறிப்பிட்ட சொத்தானது உரித்து இல்லை என செயலாளரினால் உரிமம் இல்லை என பத்திரமொன்று வழங்கப்படும். தவிசாளரினால் அதிகாரம் வழங்கப்பட்ட உத்தியோகத்தரினால் வரி செலுத்தப்படாத சொத்து பொது ஏலத்தில் விற்கப்பட்டு மதிப்பிடப்பட்ட வரி வசூலிக்கப்படும். (1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை கட்டளை சட்டத்தின் 162 வது பிரிவு).

அசையும் சொத்து தடை செய்யப்படாத நிலையில் குறிப்பிட்ட சொத்து குறித்து சபையின் செயலாளரினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை சபையின் ஆதன வரி பிரிவிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

தற்பொழுது ஆதன வரி அறவிடுகின்ற பிரிவுகள்.

  • மஸ்கெலியா
  • சாமிமலை