வியாபார அனுமதிப்பத்திரம் வழங்கல்

1987ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 149 வது 1 பிரிவு மற்றும் 1952ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றங்கள் (நிறைவேற்று துணைச்சட்டம்) சட்டத்தின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட துணைவிதிகளில் குறிப்பிடப்பட்ட வியாபாரங்களுக்கு வியாபார அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டிய வியாபாரங்கள்

அடகு பதிவு செய்தல்.குளிர்பான உற்பத்தி நிலையம்.
பொது விளையாட்டு மைதானங்களை பாவனைக்க உட்படுத்தல்.மலேரியா தடுப்பு மற்றும் நுளம்பு ஒழிப்பு.
வாகனங்களை செலுத்துதல்.தொற்று நோய்கள்
வீதிகளில் கருத்தரங்குகளை நடாத்துதல்.பொதுக் குளியல் இடங்கள்.
தடை ஏற்படுத்தல் மற்றும் சட்டவிரோத கையகப்படுத்தல்.லோண்டரி (சலவை).
செயற்றிட்டங்களை முன்னெடுத்தல்.மாட்டுத் தொழுவங்கள்.
கழிவுகளை அப்புறப்படுத்தல்.பறவைகள் விலங்குகள் மற்றும் பூக்களஅகியன அழித்தல்.
குடில்களில் (கொட்டகைகளில்) அளவை மீறி வசித்தல்.மிருக வதையை தடுத்தல்.
தங்குமிடங்கள்.மாடு வெட்டும் இடங்கள்.
கிராமபோன், ஒலிப்பெருக்கிகளை பாவனை செய்தல்.பொது சந்தைகள்.
உணவகங்கள்.நீர் வழங்கல்.
சாப்பாட்டுக்கடை, சிற்றுண்டிச்சாலை, தேநீர் அல்லது கோப்பி.கிணறு தோண்டுதல்.
வெதுப்பகம் (பேக்கரி).பாதுகாப்பற்ற கிணறுகள்.
பாற்பண்ணை மற்றும் பால் வியாபாரம்.தலைமுடி திருத்தம் சலூன்கள் மற்றும் பாபர் சாப்புகள்.
உணவு பண்டங்கள் விற்பனை.வாகனங்கள் மற்றும் மிருகங்கள்.
ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையம்.கடன்.

இதற்கு மேலதிகமாக 1952 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க உள்ளுராட்சி மன்றங்கள் (நிறைவேற்று துணைச்சட்டம்) சட்டத்தின் பிரகாரம் அபாயகரமானதும் அருவறுப்பானதும் வியாபாரத்திற்கு மேலதிகமாக சபை வருடாந்தம் விதிக்கின்ற வியாபாரத்திற்காகவும் வியாபார அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதற்காக சபையினால் வழங்கப்படுகின்ற விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

கட்டணம்

ஆண்டுப் பெறுமானம் ரூ.750 ற்கு மேற்படாதவிடத்துரூ. 500
ரூ.750 இற்கு மேற்பட்டு ரூ.1500 இற்கு மேற்படாதவிடத்துரூ. 750
ரூ.1500 இற்கு மேற்படுமிடத்துரூ. 1000

நடவடிக்கை முறை

  • பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள அனைத்து வியாபாரங்களும் விண்ணப்பப்படிவமொன்றை வழங்குதல்
  • பூர்த்திசெய்த விண்ணப்பப்படிவங்களை சேகரித்தல்
  • விண்ணப்பதாரர் வழங்கிய தகவல்களின் செல்லுபடியாகும் தன்மையை பரீட்சித்தல்
  • பொது சுகாதார பரிசோதகரின் அங்கீகாரத்துக்கு அனுப்புதல்
  • கள அவதானிப்பை மேற்கொள்தல்
  • குறைபாடுகள் இல்லாவிட்டால் அனுமதிப்பத்திரத்துக்கு பரிந்துரை செய்தல்
  • அனுமதிப்பத்திர கட்டணத்தை அறவிட்டதன் பின்னர் அனுமதிப்பத்திரத்தை வழங்குதல்

பொது சுகாதார பரிசோதகரின் அங்கீகாரம் கிடைக்காத போது,

  • விண்ணப்பப்படிவத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி விண்ணப்பதாரருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்படும்
  • மேற்படி குறைபாடுகளை திருத்தி பிரதேச சபைக்கு அறிவிக்க வேண்டும்.
  • மீண்டும் மேற்கொள்ளப்படுகின்ற நிலைய பரிசீலனையின் பின்னர் வியாபாரம் அனைத்து சுகாதார சட்டங்களையும் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருந்தால் அங்கீகாரம் வழங்கி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வியாபார அனுமதிப்பத்திரமொன்றைப் பெறாத போது

  • வியாபார அனுமதிப்பத்திரமொன்றைப் பெற்றுக்கொள்ளும்படி எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
  • அறிவித்தல் வழங்கி 7 நாட்களுக்குள் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளாவிட்டால் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

கைத்தொழில் வரி செலுத்தும் நடவடிக்கை முறை 

  • வியாபார அனுமதிப்பத்திரமொன்றை பெற்றுக்கொள்ளும்படி வியாபாரத்தின் உரிமையாளருக்கு எச்சரிக்கை நகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள அனைத்து வியாபார நிலையங்களுக்கும் இலவசமாக விண்ணப்பம் வழங்கப்படும்.
  • விண்ணப்பப்படிவங்கள் மீண்டும் சேகரித்துக்கொள்ளப்படும்.
  • வருடாந்த பெறுமதியின் அடிப்படையில் ரூ.1000 வரையிலான வரி அறவிடப்படும்.
  • வரி செலுத்தியதன் பின்னர் அதற்கான பற்றுச் சீட்டை பெற்றுக்கொள்ள முடியும்.

இவ் வரி தீர்மானிக்கப்படுவது,

  • வியாபாரத்தின் வருடாந்த பெறுமதி
  • வியாபாரம்
  • சேரும் இலாபம்
  • வியாபாரத்தின் மூலம் விநியோகிக்கப்படுகின்ற உற்பத்திகளின் அத்தியாவசியமான தன்மைகளின் அடிப்படையில்
ஆண்டுப் பெறுமானம் ரூ.750 ற்கு மேற்படாதவிடத்துரூ. 500
ரூ.750 இற்கு மேற்பட்டு ரூ.1500 இற்கு மேற்படாதவிடத்துரூ. 750
ரூ.1500 இற்கு மேற்படுமிடத்துரூ. 1000

வியாபார வரி செலுத்தாத போது,

  • வியாபாரத்தின் உரிமையாளருக்கு அறிவித்தலொன்று வழங்கப்படும்
  • அறிவித்தலுக்கு பதிலளித்து கொடுப்பனவை செலுத்தாதபோது நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.

வியாபார வரி செலுத்துதல்

வியாபார அனுமதிப்பத்திரம் அல்லது கைத்தொழில் வரி செலுத்த வேண்டியதல்லாத வியாபாரங்களுக்கு வரி செலுத்த வேண்டும்.

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 152 ஆவது பிரிவின் பிரகாரம் கடந்த ஆண்டின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வரி விதிக்கப்படுகின்றது.

வருமானம்வரி
ரூ.6000.00 மேற்படாதபோதுஇல்லை
ரூ.6000.00 ற்கு மேல் ரூ.12000.00 ற்கு குறையரூ. 90.00
ரூ.12000.00 ற்கு மேற்படுகின்ற ரூ.18750.00 ற்கு மேற்படாதரூ.180.00
ரூ.18750.00 ற்கு மேற்படுகின்ற ஆயினும் ரூ.75000.00 ற்கு மேற்படாதபோதுரூ. 360.00
ரூ.75000.00 ற்கு மேற்படுகின்ற ஆயினும் ரூ.150000.00 ற்கு மேற்படாதபோதுரூ. 1200.00
ரூ.150000.00 ற்கு மேற்படுகின்ற போதுரூ. 3000.00

விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அலுவலகத்திற்கு ஒப்படைத்ததன் பின்னர் வரி பணத்தை செலுத்த முடியும்.

வரி பணத்தை செலுத்தாத ஒருவருக்கு வரி பணத்தை செலுத்துமாறு அறிவிக்கப்பட்டதன் பின்னரும் குறித்த நபரால் வரி செலுத்தப்படாதவிடத்து நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.