பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் அமைந்துள்ள காணிகளின் ஒரு பகுதியை நிதி நிறுவனமொன்றுக்கு ஈடுவைத்து கடன் பெற்றுக்கொள்கின்றபோது அக் காணிக்கு பிரதேச சபை வழங்குகின்ற தெருவெல்லை சான்றிதழ் தேவைப்படும். தெருவெல்லையை மீறி அமைத்துள்ள கட்டிடங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பிரதேச சபைக்கு அதிகாரம் இருப்பது இச் சான்றிதழில் உள்ள முக்கிய அம்சமாகும்.
தகைமை
- குறித்த கட்டிடம் பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் அமைந்திருக்க வேண்டும்.
இதற்காக,
- கட்டணம் செலுத்தி விண்ணப்பப்படிவமொன்றை பிரதேச சபை அலுவகத்தின் ஆதன வரி பிரிவிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
- விண்ணப்பப்படிவத்தை, காணி வரைபடத்தின் மூலப் பிரதியை இரண்டு பிரதிகளுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
- அதன்போது விண்ணப்பதாரர் வரி, அனுமதிப்பத்திர கட்டணம் அல்லது ஏனைய சம்பந்தப்பட்ட கட்டணங்களை நிலுவையாக வைத்திருக்கவில்லை என்பதற்கு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
- அவ்வாறு நிலுவையாக இருந்தால் அப்பணத்தையும் செலுத்த வேண்டும்.
- விண்ணப்பதாரர் சமர்ப்பித்துள்ள வரைபடத்தின் மூலப்பிரதிகளிலும் இணை பிரதிகளிலும் தொழிநுட்ப அதிகாரியால் பரிசோதிக்கப்பட்டு, வீதி ரேகை அடையாளமிடப்பட்டதன் பின்னர் தெருவெல்லை சான்றிதழ் வழங்கப்படும்.
- சகல ஆதன வரிகளும் செலுத்தி முடிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.