Public Library – வாசகர் சுயதொழில் விழிப்புணர்வு செயற்றிட்டம் மற்றும் பெண்களை ஊக்குவிக்கும் நிகழ்வு

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் இயங்கும் மஸ்கெலியா பொது நூலகம் மற்றும் சாமிமலை வாசிகசாலை இணைந்து நடாத்திய நூலக வாசகர் சுயதொழில் விழிப்புணர்வு செயற்றிட்டம் மற்றும் பெண்களை ஊக்குவிக்கும் நிகழ்வு 2022.08.26 அன்று கௌரவ தவிசாளர் G.செண்பகவள்ளி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் வருகை தந்து சுயதொழில் தொடர்பாக விழிப்புணர்வு செயலமர்வினை நடாத்தினர். குறித்த செயலமர்வில் சுயதொழில் ஒன்றினை ஆரம்பித்தல் தொடர்பான… Continue reading Public Library – வாசகர் சுயதொழில் விழிப்புணர்வு செயற்றிட்டம் மற்றும் பெண்களை ஊக்குவிக்கும் நிகழ்வு

Read More

“மவுசாக்கலை – சீட்டன்” செல்லும் பிரதான பாதையானது

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட “மவுசாக்கலை – சீட்டன்” பிரிவிற்கு செல்லும் பிரதான பாதையானது, பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் வாகன போக்குவரத்திற்கும் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியிருந்தது. எனவே இப்பாதையின் அபிவிருத்தி தொடர்பாக மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் G.செண்பகவள்ளி ஊடாக மக்கள் எனது கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். எனவே இப்பாதையானது தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின், 1.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.  

Read More

“பிரவுன்லோ – கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்திற்கு” செல்லும் பிரதான பாதையானது

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட “பிரவுன்லோ – கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்திற்கு” செல்லும் பிரதான பாதையானது, பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் வாகன போக்குவரத்திற்கும் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியிருந்தது. எனவே இப்பாதையின் அபிவிருத்தி தொடர்பாக மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் G.சென்பகவள்ளி ஊடாக மக்கள் எனது கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். எனவே இப்பாதையானது தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின், ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

Read More

தெய்வகந்த மற்றும் மஸ்கெலியா வட்டாரத்திற்கான வீதி விளக்குகள்

மஸ்கெலியா பிரதேச சபையின் வருடாந்த நிதி ஒதுக்கீட்டின் ஊடாக நேற்றைய தினம் தெய்வகந்த மற்றும் மஸ்கெலியா வட்டாரத்திற்கான வீதி விளக்குகள் கௌரவ வட்டார உறுப்பினர்கள் இடம் கையளிக்கப்பட்டது.

Read More